Reading Time: < 1 minute

100 கனேடியர்களுக்கு எதிராக ரஸ்யா வெளிவிவகார அமம்சசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

100 கனேடியர்கள் மீது தடை விதிக்கப்படுவதாக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

குறித்த 100 பேரும் ரஸ்யாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கம் அண்மையில் ரஸ்யா மீது விதித்த தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு ரஸ்யா தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஸ்யார் போர் தொடுத்து வருவதாகவும் அங்கு இழைக்கப்படும் போர்க் குற்றச் செயல்களுக்காகவும் கனடா, பல்வேறு வழிகளில் ரஸ்யா மீது தடைகளை விதித்து வரும் பின்னணியில் கனேடியர்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின், பிரபல எழுத்தாளர் மார்கரட் ஆட்வுட், நடிகர் ஜிம் கெரி மற்றும் பிரபல வரலாற்று ஆய்வாளர் எமி நைட் ஆகியோர் உள்ளிட்ட 100 பேர் மீது ரஸ்யா தடை விதித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட ஏனைய 97 பேரில் அதிகமானவர்கள் உக்ரைன் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஸ்யாவிற்கு எதிராக கனடாவில் அணி திரள்வது காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.