Reading Time: < 1 minute

டொரன்டோவில் 10 அடி அகலமான வீடு ஒன்று தசம் நான்கு ஐந்து மில்லியன் ரூபாவிற்கு டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டொரன்டோவின் சவுண்டஸ் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு ஒரு படுக்கையறை மற்றும் நான்கு குளியல் அறைகளைக் கொண்ட வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடு 1.149 மில்லியன் டாலர்களுக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

எனினும் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இந்த வீடு ஒன்று தசம் நான்கு ஐந்து டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பட்டியலிடப்பட்ட விலையை விடவும் 3 லட்சம் டாலர்கள் அதிகமாக இந்த சிறிய வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொரன்டோவில் தொடர்ச்சியாக வீடுகளின் விலைகள் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையிலான வீட்டு விலை வித்தியாசம் 40000 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 14 அடி அகலமான வீடொன்று டொரன்டோவில் 3.4 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.