கனடாவில் வாழும் 1.4 மில்லியன் கனேடியர்களுக்கு கோவிட் 19 அறிகுறிகள் நீண்ட நாட்களாக தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கயேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிக நீண்ட நாட்களுக்கு நோய் அறிகுறி தென்படுவதாக இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனேடிய பொது சுகாதார முகவர் நிறுவனத்தின் தகவல்களை உள்ளடக்கி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று உறுதியாகி மிக நீண்ட காலங்களுக்கு ஒரு சிலருக்கு நோய் அறிகுறி தொடர்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாத இறுதி அளவில் கனடாவின் 18 வயதிற்கும் மேற்பட்ட மொத்த சனத்தொகையில் 30 விதமானவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.
நோய் தொற்று ஏற்பட்டு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் அளவில் நோய் அறிகுறிகளை உணர்வதாக தொற்று உறுதியான 14 .8 விதமானவர்கள் அல்லது1.4 மில்லியன் கனடியர்கள கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைசுற்றல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பொதுவான நோய் அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்களை விட பெண்களே அதிக அளவில் இந்த நோய் அறிகுறியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.