கனடா நாடாளுமன்ற ஆண் எம்.பிக்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து வந்த காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவே ஆண் எம்.பிக்கள் இவ்வாறு பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து பிரசாரத்தை மேற்கொண்டனர்.
அதேவேளை கனடாவில் பெண்கள் தங்குமிடத்திற்கு நிதி திரட்டுவது, பாலின அடிப்படையில் வன்முறை குறித்து ஆண்களும் சிறுவர்களும் அறிந்துகொள்வதை நோக்கமாக கொண்டு, கடந்த 4 ஆண்டுகளாக ”ஹோப் இன் ஹை ஹீல்ஸ்” (Hope in High Heels) பிரசாரம் நடத்தப்பட்டு வருகின்றது.
இது பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் எம்.பிக்கள் நடவடிக்கை பாராட்டுகளை பெற்றாலும், இது போன்ற நடவடிக்கை ஒரு போதும் தீர்வை தராது என ஒரு சாரார் விமர்சித்துள்ளனர்.