ஹொங்கொங்கில் சனநாயக ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் வெளியிட்ட கண்டன அறிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள சீன் அதிகாரிகள் இது அநாவசியமான தலையீடு என்று தெரிவித்துள்ளனர்.
ஹொங்கொங்கில் அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாவும், வன்முறைகளை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனறும், ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சருடன் இணைந்து கிறிஸ்டியா ஃபிறீலான்ட் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். எனினும் அவர்கள் அரசாங்கத்த தரப்பையோ, போராட்டக்காரர்களையோ குறிப்பாகச் சுட்டிக்காட்டவில்லை.
இவ்வாறான நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனடாவுக்கான சீனத் தூதரகப் பேச்சாளர், சீனாவின் உள்விவகாரத்திலும், ஹொங்கொங் விடயத்திலும் தேவையற்ற தலையீடடினை மேற்கொள்ளும் நடவடிக்கையை கிறிஸ்டியா ஃபிறீலான்ட் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் கனடா தனது வார்த்தைப் பிரயோகங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.