Reading Time: < 1 minute

ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை விவகாரத்தில் கைதான 17 சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் கனேடிய தூதரக அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை வழக்கில் ஹெய்ட்டி அமெரிக்கர்கள் இருவர் கைதாகியுள்ளனர். அதில் ஒருவர் ஹெய்ட்டி தலைநகரான Port au Prince-ல் அமைந்துள்ள கனேடிய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர் என்பது தெரிய வந்துள்ளது.

35 வயதான James Solages என்பவரே அந்த நபர். கைதானவர்களில் மிக குறைந்த வயதும் இவருக்கே. James Solages தொடர்பில் மேலதிக தகவல்களை ஹெய்ட்டி நிர்வாகம் வெளியிடவில்லை.

ஆனால் சிறார்களுக்கான சேவையை முன்னெடுத்து வருவதாகவும், தொண்டு நிறுவனங்களில் தொடர்புடையவர் எனவும், வளரும் அரசியல்வாதி எனவும் அவருக்கான இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி 2010ல் ஹெய்ட்டியில் உள்ள கனேடிய தூதரகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் பாதுகாப்பு தொடர்பில் James Solages பணியாற்றியுள்ளார் என்றே கூறப்படுகிறது. மேலதிக தகவல்கள் ஏதும் James Solages தொடர்பில் வெளியிடப்படவில்லை.