Reading Time: < 1 minute

புத்தாண்டு மலரவிருந்த நேரத்தில் ஹாலீபெக்ஸ் பகுதியில் பெண் ஒருவரையும் அவரது தந்தையையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

39 வயதான மேத்யூ கொஸ்டின் என்ற நபரே இந்த படுகொலை சம்பவங்களை மேற்கொண்டுள்ளார். இவர் 40 வயதான கோராளி ஸ்மித் மற்றும் அவரது 73 வயதான பிரட் போர்ட் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 2019 ஆம் ஆண்டு டொரன்டோவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஹாலிபெக்ஸ் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பின்னர் குறித்த நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த ஹாலிபெக்ட் படுகொலை சம்பவம் ஓர் குடும்ப வன்முறை சம்பவம் எனவும் கொஸ்டினும் கோரளியும் உறவில் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் திகதி டொரன்டோ இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்திருக்கின்றனர்.

கொஸ்டினுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஹாலிபெக்ஸ் பிராந்திய போலீசாருக்கு எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.