கனடாவில் ஹாமில்டன் நகரில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் முறையாக தொற்று நீக்கப்படாத சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதால், நோயாளிகள் ஹெபடைட்டிஸ் மற்றும் பிற தொற்றுநோய்களுக்கு ஆளாகியிருக்கக்கூடும் எனப் பொதுச் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Fennell & Ottawa பல் மருத்துவமனை (1134 Fennell Avenue East, Upper Ottawa Street அருகில்) இல் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஹாமில்டன் பொதுச் சுகாதார சேவைகள் அலுவலகம் (HPHS) தெரிவித்துள்ளது.
2019 ஜூலை 25 முதல் 2025 பெப்ரவரி 20 வரை, டாக்டர் மெரெனிசா கோன்சாலஸ்-டியாஸ் வழிநடத்தும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள், முறையாக தொற்று நீக்கப்படாத சாதனங்களால் பாதிக்கப்படியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தொற்று அபாயம் குறைந்த நிலையில் இருப்பினும், இந்தச் சாதனங்கள் ஹெபடைட்டிஸ் B, ஹெபடைட்டிஸ் C மற்றும் HIV போன்ற இரத்தத்தால் பரவும் நோய்களை பரப்பியிருக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல் சுத்தம் செய்யுதல், கிரவுன்கள், மறுசீரமைப்புகள், பல் பிடுங்குதல், போன்ற எந்தவொரு சிகிச்சையும் பெற்ற நோயாளிகள் இரத்தத்தால் பரவும் நோய்களுக்கு ஆளாகியிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.