Reading Time: < 1 minute

கனடாவின் பகுதியில் சுமார் ஆறு லட்சம் டொலர் பெறுமதியான போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹமில்டனின் பர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை சோதனையிட்டபோது இவ்வாறு போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன், ஏழு கிலோ கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பதப்படுத்தப்பட்ட 33 கிலோகிராம் எடையினுடைய கஞ்சா போதை பொருள் உள்ளிட்ட பல போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த வீட்டிலிருந்து சில துப்பாக்கிகளும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிகமாக சந்தேக நபரிடமிருந்து 2 லட்சம் டொலர் பெறுமதியான பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் 31 வயதான மற்றும் ஒருவரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.