கனடாவில் அண்மையில் ஹாலிபெக்ஸ் வோல்மார்ட் (Walmart) பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கனடாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் நிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான வோல்மார்ட் நிறுவனத்தின் பேக்கரி ஓவன் ஒன்றிற்குள் இளம் யுவதி ஒருவர் சிக்கி உயிரிழந்திருந்தார்.
ஹாலிபெக்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்று இருந்தது.
இந்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த யுவதியொருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த யுவதியின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு வருகை தர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவ உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யுவதியின் இறுதி சடங்குகளில் பங்கேற்பதற்காக அவர்கள் கனடா வருகை தர உள்ளனர். இந்தப் பெண்ணின் தாயும் இந்தப் பெண்ணும் சுமார் இரண்டு ஆண்டுகளாக குறித்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தப் பெண் கனடாவில் குடியேறியினார். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்த யுவதியின் குடும்பத்திற்கு உதவும் நோக்கில் சுமார் 2 லட்சம் டொலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.