Reading Time: < 1 minute

கனடாவின் வோகனில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சம்பத்தில் ஐந்து பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்படைய 73 வயதான சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வோகன் அடுக்கு மாடி குடியிருப்பின் முதலாம் மாடியில் பத்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் பிரான்ஸிஸ்கோ வில்லி (Francesco Villi) என்ற நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

உயிரிழந்த ஐந்து பேரில் மூன்று போர் குறித்த அடுக்குமாடி குடியிருப்புச் சபையின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வோகனின் ஜேன் மற்றும் ரதபோர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பு அமைந்துள்ளது.

இந்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்படைய வில்லி பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார்.

அடுக்கு மாடி குடியிருப்பு சபையுடன் வில்லி என்ற நபருக்கு பல்வேறு சட்டப் பிணக்குகள் காணப்பட்டதாகவும் இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுக்கு மாடி குடியிருப்பு சபை குறித்து சமூக ஊடகங்களில் இழிவான கருத்துக்களை பதிவிடுதல், காணொளிகளை வெளியிடுதல் போன்றவற்றை தவிர்க்குமாறு கடந்த 2019ம் ஆண்டு நீதிமன்றம் வில்லிக்கு உத்தரவிட்டிருந்தது.

சபையைச் சேர்ந்தவர்கள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக வில்லியும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் அண்மையில் வில்லியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.