Reading Time: < 1 minute

கனடாவின் வோகன் நகரில் மூன்று வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து யோர்க் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சனிக்கிழமை மாலை, ரதர்போர்டு (Rutherford) மற்றும் வெஸ்டன் (Weston) வீதிகள், வாகன் மில்ஸ் (Vaughan Mills) வணிக வளாகத்திற்கு அருகில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக முடக்கப்பட்டதாக யோர்க் பொலிஸார் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டிருந்தனர்.

மூன்று வாகனங்கள் மோதியதால் ஒரு நபர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவரின் நிலைமை குறித்து போலீசார் இதுவரை தகவல் வெளியிடவில்லை.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சாட்சிகளிடம் இருந்து தகவல் சேகரிக்க யோர்க் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.