கனடாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், நாட்டு மக்கள் ஆறுதல் அடையும் வகையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஹென்றி கூறுகையில், ‘வைரஸ் வெளியில் எளிதில் பரவுவதாகத் தெரியவில்லை. வெளியே சென்று உங்கள் குடும்பத்தினருடன் விளையாடுங்கள். எங்கள் ஸ்கை ஹில்ஸ் வரை செல்லுங்கள். விஸ்லர் வரை செல்லுங்கள்’ என கூறினார்.
இதற்கிடையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிதாக 11பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு வன்கூவரில் உள்ள லயன்ஸ் கேட் மருத்துவமனையில் உள்ள மூன்று நிர்வாக ஊழியர்களும் இதில் அடங்குவதாக போனி ஹென்றி தெரிவித்தார்.
மேலும், சுமார் 250 இற்க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டங்களை தடை செய்ய கட்டாய உத்தரவு பிறப்பிப்பதாக டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.