டோமினிக்கண் குடியரசுகளில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணடியை விமான பணியாளர்கள் நேற்றைய தினம் நாடு திரும்பி உள்ளனர்.
கனடிய விமான பயணிகள் விமான சேவை நிறுவனமான பைவொட் (Pivot) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய விமான பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடுமையான மன அழுத்தங்களுக்கு உட்பட்டு இருப்பதாகவும் ஊடகங்கள அந்தரங்க உரிமைகளை மதித்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி எரிக் ஹெட்மான்சன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கல்கரியிலிருந்து டாமினிக் குடியரசுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பயணம் செய்த விமானத்தில் 200 கிலோ கிராம் கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான சேவை பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விமான பணியாளர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் பல்வேறு விசாரணைகளை நடத்தி இருந்தனர்.
இரண்டு விமானிகள் உள்ளிட்ட ஐந்து பணியாளர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக விமான பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த எட்டு மாத காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த இந்த பணியாளர்கள மன வலிமையுடன் சவால்களை வெற்றிகொண்டுள்ளனர் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.