Reading Time: < 1 minute

கனடாவில் வெறுப்புணர்வு மற்றும் குரோத செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

லிபரல் அரசாங்கம் இது தொடர்பில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

குரோத உணர்வை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் மற்றும் வெறுப்புணர்வு சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய பல்வகைமை அமைச்சர் கமால் கெஹரா இது தொடர்பான செயல்திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

பல்வேறு அரச நிறுவனங்களுடன் இணைந்து வெறுப்புணர்வு சம்பங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கனடிய அரசாங்கம் 274 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வு தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய மத வழிபாட்டுத்தளங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிசிடிவி கேமரா கட்டமைப்புகள் உள்ளிட்டனவை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் குற்ற செயல்களை வரையறுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.