Reading Time: < 1 minute
அண்மையில் வெனிசுலாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுமாறு கனடிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தேர்தலில் ஜனாதிபதி நிக்கலோஸ் மடுரோ மற்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மரியா கரீனா மச்சாடோ ஆகிய இருவரும் வெற்றியீட்டியதாக பிரகடனம் செய்துள்ளனர்.
தேர்தலில் ஜனாதிபதி மடுரோ 51 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் பேரவையின் ஒரு தொகுதியினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு எனினும் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் மரியா வெற்றியிட்டியுள்ளதாக மற்றும் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து அனைத்து தொகுதிகளினதும் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுமாறு கனடா கோரியுள்ளது.
ஜனநாயக ரீதியிலான தேர்தல் முடிவுகளை மட்டுமே கனடா ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.