Reading Time: < 1 minute

சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை வெங்காயத்தில் சால்மோனெல்லா விஷத்தன்மை கண்டறியப்பட்டுள்ள நிலையில், திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக கனேடிய உணவு ஆய்வு முகமை கூறுகிறது.

மெக்சிகன் மாநிலமான Chihuahua-வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயமானது ஒன்ராறியோ, கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையில் விற்பனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வெங்காயமானது பல்வேறு பிராண்ட் பெயர்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட வெங்காயத்தை வைத்திருக்கும் நுகர்வோர் அவற்றை வெளியே வீசவோ அல்லது வாங்கிய இடத்திற்கு திருப்பித் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சால்மோனெல்லா விஷத்தன்மை கொண்ட தொடர்புடைய வெங்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் கடுமையான கீல்வாதம் ஆகியவை சால்மோனெல்லா விஷத்தின் அறிகுறிகளில் என கண்டறியப்பட்டுள்ளது.