கனடாவில் வீட்டு வன்முறை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட கனடிய அரசியல்வாதி ஒருவர் பதவி இழந்துள்ளார்.
நோவா ஸ்கோஷியாவின் நீதி அமைச்சர் பிரட் ஜோன்ஸ் இவ்வாறு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நீதி அமைச்சர் ஜோன்ஸ் பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பதவி விலகலை ஏற்றுக் கொண்டதாக மாகாண முதல்வர் ரிம் ஹ_ஸ்டன் அறிவித்துள்ளார்.
வீட்டு வன்முறைகள் தொடர்பில் ஜோன்ஸ் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
வீட்டு வன்முறைகளை விடவும் சவால் மிக்க பிரச்சினைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை எற்படுத்தியதனைத் தொடர்ந்து ஜோன்ஸ் பதவி விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை ஏற்றுக்கொள்வதாக மாகாண முதல்வர் ஹ_ஸ்டன் அறிவித்துள்ளார்.
நோவா ஸ்கோஷியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட் போது, வீட்டு வன்முறைகளின் தாக்கத்தை மலினப்படுத்தும் வகையில் ஜோன்ஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.
தாம் வெளியிட்ட கருத்துக்காக வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சருக்கு எதிராக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அவர் பதவியை துறந்துள்ளார்.