கனடாவில் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கனடிய வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் கனடிய மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது. வீடுகளை நிர்மானிப்பதற்கும் , மலிவான வீடமைப்பு திட்டங்களை அறிமுகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்க பல பில்லியன் டொலர்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் வீடுகளுக்கான பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடிப்பெயர்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக வீடுகளுக்கான தட்டுப்பாட்டை மேலும் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அம்பலப்படுத்தப் போவதில்லை என அமைச்சர் பறேசர் தெரிவித்துள்ளார்.
எனினும், வீடமைப்பிற்காக குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.