கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து கியூபெக் மாகாணத்தில், குடியிருப்புகளிலும் 6 பேர்களுக்கு மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியூபெக் மக்கள் கிறிஸ்துமஸ் நாளில் 10 பேர்கள் வரையில் ஒன்றாக கூட்டம் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிசம்பர் 26ம் திகதி வீடுகளில் 6 பேர்களுக்கு மேல் அல்லது இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு மேல் ஒன்று கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதே கட்டுப்பாடுகளை தனியார் விடுதிகளிலும், உணவகங்களிலும் பின்பற்றவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகளில் 25 பேர்கள் வரையில் கலந்துகொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் புதன்கிழமை மட்டும் புதிதாக 6,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி, நாளும் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை 100 என அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.