Reading Time: < 1 minute

வீடற்ற மக்களுக்கு தங்குமிட வசதிகளுக்காக 30 மில்லியன் டொலர்களுக்கு வன்கூவர் நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது வீடற்ற மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்க, இந்த நிதி பயன்படுத்தப்படும்.

வெற்றிடமாக உள்ள ஹோட்டல் மற்றும் வணிக தளங்கள், அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் ஒற்றை அறைகள் கொண்ட கட்டடங்களுக்கு இந்த தொகை செலவிடப்படும்.

நேற்று வியாழக்கிழமை இரவு 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஒருமனதாக இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

பிரேரணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட திருத்தத்தின் ஒரு பகுதியாக, நகர சபை உடனடியாக ஸ்ட்ராத்கோனா பூங்கா வீடற்ற முகாமில் இருந்து தற்காலிக தொற்று முகாம்களுக்கு மக்களை நகர்த்தத் தொடங்கும்.