லண்டன் பகுதியில் வீடற்றவர்களுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரி, சுமார் இரண்டு டஸன் கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
வெலிங்டன் மற்றும் ஹார்டன் வீதிகளுக்கு அருகிலுள்ள சால்வேஷன் ஆர்மி வளாகத்திற்கு அருகாமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த போராட்டம் தொடங்கியது.
இந்த போராட்டத்தின் போது, குளிர்ந்த தூறலையும் பொருட்படுத்தாது அணிவகுத்த போராட்டக் காரர்கள், தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பதாதைகளை ஏந்திய வாறு, டஃபெரின் அவென்யூவில் உள்ள நகர மண்டபத்தை நோக்கி நகரத்தின் வழியே நகர்ந்தனர்.
நகர அதிகாரிகள் அண்மையில் சமூகத்தைச் சுற்றியுள்ள வீடற்ற முகாம்களின் எண்ணிக்கையைத் தகர்த்தெறிந்தனர். அத்தோடு, தங்கள் கூடாரங்களை அகற்றிவிட்டு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்களுக்கு வேறு எங்காவது கூடாரங்களை அமைத்து கொடுக்க வேண்டுமென போராட்டக் காரர்கள் வலியுறுத்துகின்றனர்.