Reading Time: < 1 minute

கனடாவில் வீட்டுத் தோட்டங்கள் அதிகளவில் தற்பொழுது பிரபல்யமாகி வருவதாக வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக மே மாதத்தில் இவ்வாறு வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்ற போதிலும் தற்பொழுது வீட்டுத் தோட்டங்கள் குறித்து மக்கள் கூடுதல் கரிசனை காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக இவ்வாறு மக்கள் வீட்டுத் தோட்டங்களை உருவாக்குவதில் அதிக நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலம் முதல் கனடாவில் வீட்டுத் தோட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விக்டோரியா தின வார இறுதி நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் வீட்டுத் தோட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மரபு ரீதியாகவே இந்தக் காலப் பகுதியில் சீரான காலநிலை காணப்படுவதனால் மக்கள் வீட்டுத் தோட்டங்களை உருவாக்குவர் என குறிப்பிடப்படுகின்றது.

உணவுப் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாகவும் அநேகமான மக்கள் உணவுப் பொருள் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கனடிய நாற்றுப்பண்ணை ஒன்றியத்தின் பிரதானி பில் ஹார்ட்டிலி தெரிவித்துள்ளார்.