Reading Time: < 1 minute

விமான பயணம் மேற்கொள்ளும் மூன்றில் ஒரு பங்கு கனேடிய மக்கள் தங்களின் பயணப் பெட்டியை தொலைத்துவிடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் 6.7% பயணிகள் தொலைத்த பெட்டியை மறுபடியும் மீட்க முடியாமல் போவதாகவும் கூறப்படுகிறது. விமான பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள், அமெரிக்க மக்கள் மற்றும் அவுஸ்திரேலியர்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், பெரும்பாலும் (32.1%) கனேடிய பயணிகளே தங்கள் உடைமைகளை தொலைப்பதாக தெரியவந்துள்ளது.

இதில் அமெரிக்க பயணிகள் 27.6% எனவும் அவுஸ்திரேலிய பயணிகள் 24.5% எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, கனேடியர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தங்கள் உடைமைகள் திருப்பி கிடைத்துள்ளதாகவே தெரிவித்துள்ளனர்.

ஆனால் உடைமைகளை தொலைத்த அமெரிக்கர்களில் 10% பேர்களுக்கு திருப்பி கிடைக்கவில்லை என்றே ஆய்வில் கூறியுள்ளனர். அவுஸ்திரேலிய மக்களில் 6.5% பேர்கள் இதே நிலையில் சிக்கியுள்ளனர்.

உடைமைகள் தொலைந்து போவதால் விமான சேவை நிறுவனத்திடன் இருந்து அளிக்கப்படும் இழப்பீடு தொகைக்காக (734 டொலர்) 18 நாட்கள் வரையில் காத்திருக்க நேர்ந்ததாக கனேடிய பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பயணிகள் (668 டொலர்) 21 நாட்கள் அவரையிலும், அவுஸ்திரேலிய பயணிகள் (512 டொலர்) 28 நாட்கள் வரையிலும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உடைமைகள் தொலைந்ததாக கூறி உரிய ஆவணங்கலுடன் பயண காப்பீட்டாளரிடம் இருந்து இழப்பீடாக கனேடியர்களுக்கு 11 நாட்களில் சுமார் 560 டொலர் பெறுகின்றனர். அவுஸ்திரேலியர்கள் 26 நாட்களுக்கு பிறகு 569 டொலர் பெறுகின்றனர். அமெரிக்க பயணிகள் 15 நாட்களில் 1,031 டொலர் இழப்பீடாக பெறுகின்றனர்.