வின்னிபெக் பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் போது, ஆறு பேரை காப்பாற்றிய ஒருவருக்கு தீயணைப்பு படையினர் மற்றும் மக்கள் பாரட்டு தெரிவித்துள்ளனர்.
ஸ்பென்ஸ் பகுதிக்கு அருகிலுள்ள ஃபர்பி வீதியின் 400 தொகுதிகளில் மூன்று மாடி கட்டடத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 6:18 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கெல்லி பிரவுண் என்பவரே பற்றி எரிந்துக் கொண்டிருந்த குறித்த கட்டத்திற்குள் சிக்கியிருந்த ஆறு பேரையும், தக்க சமயத்தில் வெளியேற்றியுள்ளார்.
கட்ட வளாகத்திற்குள் வசிக்கும் கெல்லி பிரவுண் இரவு உணவருந்திக் கொண்டிருந்தபோது, தீ பற்றி எரியும் கட்டடத்தில் உதவிக் கோருபார்களின் அலறல் சத்தத்தை கேட்டு தனது பூட்ஸ் மற்றும் வெளிப்புற ஆடைகளை விரைவாக அணிந்துகொண்டு, தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றியுள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கட்டடத்திலிருந்து லேசான புகை வருவதை அவதானித்தாகவும், பின்னர் தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவித்தனர்.
எனினும், தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.