Reading Time: < 1 minute

வின்ட்சரில் உள்ளூர் உற்பத்தி வேலைச் சந்தையில் 42 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வின்ட்சருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே, மத்திய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மெலானி ஜோலி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

வின்ட்சரில், லாவல் டூல் ரூ மோல்ட் லிமிடெட், துல்லிய ஸ்ராம்பிங் குழு மற்றும் எஸ்பிஎம் ஒட்டோமேஷன் ஆகியவற்றில் 42 புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய உபகரணங்களை வாங்குவதற்கும், நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும் அரசாங்கம் சுமார் 7 மில்லியன் டொலர்களைச் செலவிடவுள்ளது. அத்துடன் புதிய இயந்திரங்களை இயக்கக்கூடிய புதிய ஊழியர்களையும் நியமிக்கவுள்ளது.

நாடு முழுவதும் மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தை கொண்டுள்ள வின்ட்சருக்கு, இந்த அறிவிப்பானது சற்று ஆறுதல் அளித்துள்ளது. கனடாவின் கூற்றுப்படி, நகரத்தின் ஜனவரி வேலையின்மை விகிதம் 8.3 சதவீதத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.