Reading Time: < 1 minute

விசத்தை விநியோகம் செய்த கனடியப் பிரஜை ஒருவருக்கு எதிராக 14 கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கெனத் லோவ் என்ற 58 வயதான கனடியப் பிரஜைக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்ள உதவியதாக இந்த நபர் மீது மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணைய தளங்களின் ஊடாக விளம்பரம் செய்து விசம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ மாகாணத்தில் மட்டும் இந்த நபரிடம் விசத்தை பெற்றுக்கொண்ட 14 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஆபத்தான சோடியம் நைட்ரேட் உள்ளிட்ட விசப் பொருட்களை கனடா உள்ளிட்ட நாற்பது நாடுகளுக்கு விநியோகம் செய்துள்ளார் கெனத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கெனத் ஏற்கவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.