Reading Time: < 1 minute

கனடாவின் சந்தைகளில் இருந்து அவசரமாக சிறுவர் விளையாட்டுப் பொருள் ஒன்று மீளப்பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

Fisher-Price Snuga என்ற பண்டக்குறியை கொண்ட சிறுவர் ஊஞ்சல்கள் இவ்வாறு சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஊஞ்சல்களை பயன்படுத்தி விளையாடிய ஐந்து சிசுக்கள் இதுவரையில் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இந்த ஊஞ்சல் வகைகள் ஆபத்தானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊஞ்சலை பயன்படுத்திய சிசுக்கல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைகளை உறங்க வைப்பதற்காக இந்த ஊஞ்சல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

எவ்வாறெனினும், இந்த ஊஞ்சல் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் சிசுக்களுக்கு பொருத்தமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சிறுவர் ஊஞ்சல்களை பயன்படுத்திய எவரும் கனடாவில் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கனடிய சுகாதார நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. எனினும் குறித்த சிறுவர் ஊஞ்சல்களில் காணப்படும் ஆபத்து நிலையை கருத்தில் கொண்டு கனடிய சந்தைகளில் இருந்தும் இந்த ஊஞ்சலை மீள பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த ஊஞ்சல் வகைகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த ஊஞ்சலை பயன்படுத்திய ஐந்து சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.