ஒன்றாரியோவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தங்களது வான் வண்டியை திருத்துவதற்கு 55000 டொலர்களுக்கு மேல் செலவாகும் என அறிந்து கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2018ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வேன் வண்டி ஒன்றை பழுதுபார்க்கும் முயற்சியில் இந்த குடும்பம் ஈடுபட்டுள்ளது.
2018 Chrysler Pacifica Hybrid என்ற வாகனமே இவ்வாறு திடீரென செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தின் பெட்டரி மற்றும் என்ஜின் என்பனவற்றை புதிதாக மாற்ற வேண்டியிருப்பதாக மோட்டார் வாகன பழுதுபார்க்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்டரியை மாற்றுவதற்கு 26000 டொலர்களும், என்ஜினை மாற்றுவதற்கு 29000 டொலர்களும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பழைய வாகனத்தை பழுதுபார்ப்பதற்கு சுமூர் 55000 டொலர்கள் செலவிட நேரிடுவதனால் குறித்த குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இவ்வளவு பாரிய தொகையை செலவிட்டு வாகனத்தை பழுதுபார்க்க வேண்டிய அவசியமில்லை என ஒன்றாரியாவின் பிரிங்டனைச் சேர்ந்த டான்யா கால் வோ தெரிவித்துள்ளார்.