Reading Time: < 1 minute

வான்கூவார் விமான நிலையத்தின் சர்வதேச விமான சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த வரையறை நீடிக்கும் என விமான நிலையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பனிப்புயல் காரணமாக விமான நிலையத்தில் சேவைகளை வழங்குதில் கடுமையான தாமத நிலை உருவாகியுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் விமான பயணங்கள் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்குவது தற்காலிக அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கரையோரப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இவ்வாறு விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த வரையறைகளினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு இந்த விமான பயண வரையறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.