Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கிட்சனர் பகுதி சர்வதேச பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வாடகை மோசடியில் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார்.

ஹார்ஷ் பட்டேல் என்ற மாணவரே இவ்வாறு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார் கொனிஸ்டோகா கல்லூரியில் கற்கும் சர்வதேச மாணவரான ஹார்ஷ் பட்டேல் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.

வீடு ஒன்றே வாடகைக்கு இருப்பதாக கூறி பணம் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் அவ்வாறு வீடு வாடகைக்கு இல்லை என அறிந்து கொண்டதாக மாணவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச மாணவர்கள் மற்றும் குடியேறிகள் இவ்வாறான மோசடிகளில் இலக்கு வைக்கப்படுவதாக பாட்டேல் தெரிவிக்கின்றார்.

குடியிருப்பு ஒன்று வாடகைக்கு விடப்படுவதாக முகநூலில் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

கனடா முழுவதிலும் இணைய வழியிலான வாடகை மோசடிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் இவ்வாறான 51 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வாடகைக்கு விடுவதாக போலியாக சிலர் விளம்பரம் செய்து மோசடியான முறையில் பணம் பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு வாய்மொழி மூலம் இனக்கப்பாடுகளுக்கு இணங்க கூடாது எனவும் ஆவண ரீதியான இணக்கப்பாடுகள் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் விளம்பரம் செய்யப்படும் வீடு காலியானதா அது வாடகைக்கு விடப்படுகின்றதா என்பதை அறிந்து கொண்டதன் பின்னர் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.