Reading Time: < 1 minute

கனடா வாழ் பிரஜைகள் வரி தொடர்பான கோப்புக்களை மே மாதம் 1ம் திகதிக்கு முன்னர் சமர்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வருமான முகவர் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடாவில் ஆண்டு தோறும் சுமார் 30 மில்லியன் வரிக் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

எனினும், இந்த ஆண்டில் ,துவரையில் 17 மில்லியன் வரிக் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 2022ம் ஆண்டுக்கான வரி கோப்புக்களை ,ன்னமும் 13 மில்லியன் கனடியர்கள் இன்னமும் சமர்ப்பிக்கவில்லை.

வரிக் கோப்புக்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடியர்கள் வருமான வரி குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளுக்கு தற்போதைய வேலை நிறுத்தப் போராட்டம் தாக்கம் செலுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரி ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்களினால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் பல்வேறு நலன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.