Reading Time: < 1 minute
வன்கூவர் தீவின் வடக்கு முனையின் மேற்கே பசிபிக் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
எனினும், நேற்று (புதன்கிழமை) உணரப்பட்ட இந்த நிலநடுக்கங்களினால் எவ்வித சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் நிலநடுக்கமானது, காலை 8:30 மணியளவில் பி.டி., மற்றும் போர்ட் ஆலிஸுக்கு மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானது. இந்த நிலநடுக்கமானது, 3.6 ரிக்டர் அளவில் பதிவானது.
இரண்டாவது நிலநடுக்கமானது, மதியம் 12:45 மணிக்கு முன்பு, அதே பொது பகுதியில், போர்ட் ஹார்டிக்கு மேற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உருவானது. இந்த நிலநடுக்கமானது, 4.9 ரிக்டர் அளவில் பதிவானது.
அதிக நில அதிர்வுத்தன்மை கொண்ட இந்த பிராந்தியத்தில் நிலநடுக்கங்கள் இருப்பது முற்றிலும் இயல்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.