வன்கூவர்- வெஸ்ற் என்ட் அடுக்குமாடிக் குடியிருப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு இருவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முதியவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த குற்றம் நிரூபணமானது.
இதன்படி அயலவர்களைக் கொன்ற குற்றத்திற்காக, 75 வயதான லியோனார்ட் லான்ட்ரிக் என்பவர் மீது கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் திகதி மோர்டன் அவென்யூவில் உள்ள ஓஷன் ரவர்ஸ் அடுக்குமாடிக் கட்டிடத்தில் 57 வயதான சான்ட்ரா மக்னெஸ் மற்றும் 51 வயதான நீல் குரோக்கர் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இதன்போது, அயலவர்களும் லியோனார்ட் லான்ட்ரிக்கும் ஒன்றாக வசித்துவந்த நிலையில், இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் லான்ட்ரிக் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார், தீவிரப்படுத்திவந்தனர். எனினும், விசாரணையில் லான்ட்ரிக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாதுகாப்பு வழக்கறிஞர்கள், குற்றவாளி என்று தீர்ப்பு அடுத்து, லியோனார்ட் லான்ட்ரிக், மனநலக் கோளாறு ஏற்பட்டவர் என்பதால், அவரை குற்றவாளி அல்ல என அறிவிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இந்த நிலையில், நீண்டதொரு விசாரணைக்கு பின்னர், லியோனார்ட் லான்ட்ரிக் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.