Reading Time: < 1 minute

கனடாவில் நியூ பிரன்சுவிக் பகுதியில் விற்கப்பட்ட லொட்டரிக்கு 64 மில்லியன் பரிசு கிடைத்துள்ள நிலையில், அதன் உரிமையாளரை நிர்வாகிகள் தேடி வருகின்றனர்.

பரிசு அறிவித்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டதாகவும், சமூக ஊடக பக்கத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அட்லாண்டிக் கனடாவில் ஒருவர் லொட்டரியில் வெல்லும் மிகப்பெரிய தொகை இது.

2018ல் ஒருவர் 60 மில்லியன் டொலர் வென்றிருந்தார். தற்போது 64 மில்லியன் டொலர் வென்றுள்ள நபர் இதுவரை தங்களை அணுகவில்லை என தெரிவித்துள்ள நிர்வாகிகள், மிக விரைவில் அவரிடம் இருந்து அழைப்பு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, லொட்டரி வெற்றியாளர்கள் ஒரு சில தினங்களுக்குள் தங்களை தொடர்பு கொள்வது வாடிக்கை என குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள், ஆனால் தற்போது இரண்டு வாரமாக எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

வெற்றியாளரை அறிவித்த நாளில் இருந்து, தொகையை கைப்பற்ற 12 மாதங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 மாதங்களுக்கு பின்னர் அந்த தொகையானது உரிமை கோரப்படாத தொகை என கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.