Reading Time: < 1 minute

லெபனானில் சிக்கியுள்ள கனடியர்களை அழைத்து வருவதற்கு விமான ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து கனடாவிற்கு கனடிய பிரஜைகளை அழைத்து வருவதற்காக சுமார் 800 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கூடுதல் எண்ணிக்கையிலான ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என லெபனானில் வாழ்ந்து வரும் கனடியர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

ஏற்கனவே அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில் தற்பொழுது இஸ்ரேலிய படையினர் தொடர் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ள நிலையில் அங்குள்ள கனடிய பிரஜைகளை மீட்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

கூடுதல் எண்ணிக்கையில் விமானங்களை பயன்படுத்தி கனடிய பிரஜைகளை அங்கிருந்து மீட்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லெபனானில் உயிரிழந்த நபர் ஒருவரின் பெற்றோரும், கனடியர்களை மீள அழைத்து வருமாறு கோரியுள்ளனர்.

சுமார் 45 ஆயிரம் கனடியர்கள் லெபனானில் வசிக்க கூடும் என வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

வேறும் நாடுகளிலிருந்து பயணம் செய்யும் விமானங்களின் வர்த்தக விமானங்களில் ஆசனங்களை பதிவு செய்து அதன் ஊடாக கனைடியர்களை மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சுமார் 800 ஆசனங்கள் இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கனடியர்களை அழைத்து வர முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கனடியர்கள் முடிந்த அளவு சீக்கிரம் லெபனானை விட்டு வெளியேற வேண்டும் என கனடா அறிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.