2020ஆம் ஆண்டில் லண்டன் பகுதியில் 203 மரங்கள் வெட்டப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற குடிமைப் பணிக்குழு கூட்டத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட சிட்டி ஹோல் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பாடுகளுக்காக திட்டமிடப்பட்ட 21 வீதிகளில் 878 மரங்களை மர பராமரிப்பாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
இதில் 175 மரங்கள் அபிவிருத்திக்காக அகற்றப்பட வேண்டும் என்றும், மேலும் 28 மரங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் கண்டறிந்தனர்.
அகற்றப்பட வேண்டிய மரங்களில், 108 பெரிய மரங்களாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை 30 செ.மீ அல்லது 12 அங்குலங்களுக்கும் அதிகமான தடிமன்களை கொண்டுள்ளன. மற்ற 67 மரங்கள் சிறியதாகக் கருதப்படுகின்றன,
அகற்றப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மரங்களில், 13 பெரியதாகவும் மற்ற 15 சிறியதாகவும் கருதப்படுகின்றன.
கட்டுமானப் பணிகள் முடிந்ததும், நகரத்தின் வனவியல் துறை பொதுவாக தெருவில் உள்ள மரங்களின் எண்ணிக்கை மற்றும் இனங்களை மதிப்பாய்வு செய்து நகர வழிகாட்டுதல்களின்படி புதிய மரங்களை நடுவர்.
ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்கப்பட்ட வீதிகளில் 300 முதல் 400 புதிய மரங்களை நடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.