Reading Time: < 1 minute

கனடாவின் றொரன்ரோவில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நகரின் புதிய முதல்வர் ஒலிவியா சோவ் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் பூங்காவொன்றில் வைத்து இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தி குத்து என பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் றொரன்ரோவில் இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொலைகள் உள்ளிட்ட வன்முறைகளை தடுப்பதற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யப் போவதாக சோவ் தெரிவித்துள்ளார்.

இந்த 2023ம் ஆண்டில் நகரில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஒலிவியா சோவ் இதுவரையில் கடமைகளை பொறுப்பேற்றுக்காள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.