Reading Time: < 1 minute

றொரன்டோ நகரின் ரயில் நிலையமொன்றில் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் காயமடைந்துள்ளார் என றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யொங்-ப்லூர் ரயில் நிலையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கழிவறையில் வைத்து மற்றமொரு பெண் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகள் நடத்தப்பட்ட நேரத்தில் குறித்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து ரயில்கள் நிறுத்தப்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்கள் ஏதெனும் கிடைக்கப் பெற்றால் அது குறித்து அறிவிக்குகமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.