Reading Time: < 1 minute
றொரன்டோ பொதுச் சுகாதார அலுவலகம் அவசர எச்சரிக்கையொன்றை பொது மக்களுக்கு விடுத்துள்ளது.
போதை மருந்து பயன்பாடு தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வார காலப் பகுதியில் அதி மாத்திரை அளவில் போதைப் மருந்துகள் பயன்படுத்தியதனால் குறைந்தபட்சம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சில வகை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதனால் இந்த மரணங்கள் சம்பவிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதை மருந்து பயன்படுத்துவோர் தனியாக போதை மருந்து பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
போதை மருந்து பயன்படுத்தி நோய்வாய்ப்பட்டால் உடன் முதலுதவிகளை செய்து அவர்களை மருத்துவ மனையில் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.