கனடாவின் றொரன்டோ பார்க்டேல் பகுதியில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
டுன் அவன்யூ மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள 19 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டடத்தின் வரவேற்பு அறை பகுதியில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்றுமொரு நபர் மூன்றாம் மாடியில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் அருகாமையில் நிறுத்தியிருந்த பஸ் ஒன்றில் தஞ்சமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களுக்கு உயிராபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மற்றுமொருவர் தாமாகவே வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.