றொரன்டோ நகரின் மேயர் பதவி வெற்றிடத்திற்கான இடைத் தேர்தல் தொடர்பிலான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
றொரன்டோ நகர குமஸ்தா ஜோன் டி எல்விட்க் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இந்த திகதி அறிவிப்பினை நகரப் பேரவை அங்கீகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
றொரன்டோ நகர மேயராக கடமையாற்றி வந்த ஜோன் டோரி கடந்த 17ம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அலுவலக பணியாளர் ஒருவருடன் தகாத உறவு பேணிய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு அவர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்தப் பதவி வெற்றிடம் இடைத் தேர்தல் மூலம் நிரப்பப்படவுள்ளது. தேர்தல் நடாத்துவதற்காக 13 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.