றொரன்டோவில் ஒரு மணித்தியால இடைவெளியில் இரண்டு வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
நோர்த் யோர்க் மற்றும் ஸ்காப்ரோ ஆகிய பகுதிகளில் வாகனக் கொள்கை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அல்பிரட் அவன்யூ, லோங்மோர், ஷெப்பர்ட் அவன்யூ என்பனவற்றுக்கு அருகாமையில் நேற்று மாலை 4.30 மணியளவில் முதல் வாகனக் கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் இருந்தார் எனவும், white Lexus IS 250 AMDT 138 ரக வாகனமொன்று கடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மணித்தியால இடைவெளியில் ஷெப்பர்ட் அவன்யூவிற்கு அருகாமையில் மற்றமொரு வாகனக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது,
ஆயுத முனையில் இரண்டு சந்தேக நபர்கள் வாகனத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்த இரண்டு ஆயுததாரிகள் Black Toyota Rav 4 ரக வாகனமொன்றை கடத்திச் சென்றுள்ளனர்.
நகரத்தில் அண்மைய நாட்களில் வாகனக் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.