கனடாவின் றொரன்டோவில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூவர் பனிப்பாறை உடைந்து நீரில் தவறி வீழ்ந்துள்ளனர்.
ஹான்லான்ஸ் தீவுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பிளக்அவுஸ்பே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பனிப்பாறையில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் இவ்வாறு பனிப்பாறை உடைந்து, அந்த பனிப்பாறையுடன் தவறி பனி நீரில் வீழ்ந்துள்ளனர்.
இவ்வாறு கடுமையான குளிரான நீரில் வீழ்ந்தவர்கள் சுமார் பதினைந்து நிமிடங்களில் சிறிய பனிப்பாறையின் மேலு; தத்தளித்துள்ளனர்.
உயிர் காப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட தரப்பினர் விரைந்து செயற்பட்டு இந்த நபர்களை மீட்டுள்ளனர்.
இரண்டு பேர் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் தவறி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
கரையிலிருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்த மூன்றாவது நபர் அவர்களுக்கு உதவச் சென்று இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
சுமார் 20 அடி ஆழமான குளிர் நீர் நிலையின் மேல் இந்த நபர்கள் சிக்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மூன்று பேரும் உயிர் பிழைத்தது பெரிய அதிசயம் என மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பனிப்பாறை உடைந்திருந்தால் மூவரும் ஆழமான நீரில் வீழ்ந்து உயிரிழந்திருக்கவே நேரிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.