Reading Time: < 1 minute

றொரன்டோவில் தொடாச்சியாக வாடகை உயர்வடைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிகின்றது.

கனடாவின் வாடகை சந்தையில் அதிகூடிய வாடகை கொண்ட இரண்டாவது நகரமாக றொரன்டோ காணப்படுகின்றது.

கனடா முழுவதிலும் வாடகைத் தொகை 12 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. சராசரியாக வீட்டு வாடகைத் தொகை 2024 டொலர்களாக பதிவாகியுள்ளது.

மாதாந்த மற்றும் வருடாந்த அடிப்படையில் தொடர்ச்சியாக அதிகளவில் வாடகைத் தொகை அதிகரிக்கும் இரண்டு நகரங்களாக வான்கூவார் மற்றும் றொரன்டோ ஆகியன பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வான்கூவாரில் வாடகை 24.3 வீதமாகவும், றொரன்டோவில் 23 வீதமாகவும் உயர்வடைந்துள்ளது.

ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்று வான்கூவாரில் 2661 டொலர்களாகவும், றொரன்டோவில் 2551 டொலர்களாகவும் வாடகைக்கு விடப்படுகின்றது.

றொரன்டோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீட்டின் சராசரி வாடகை 3363 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.