Reading Time: < 1 minute

றொரன்டோவில் போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

றொரன்டோ பொது சுகாதார திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக மித மிஞ்சிய அளவில் போதைப் பொருள் பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 5ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்தினால் ஒன்பது மரணங்கள் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களை புகைப்பதனால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அண்மைய போதைப் பொருள் சார் மரணங்களின் போதை புகைப்பிடிக்கும் கருவிகள் சம்பவ இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு ஆபத்தான போதைப் பொருட்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருள் பயன்படுத்துவோர் தனித்து இருக்கும்போது அவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.