Reading Time: < 1 minute

கனடாவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடந்த ஜூன் மாதம் வீடுகளின் விற்பனை குறைவடைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் வீட்டு விற்பனை அதிகரித்த போதிலும் இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி எண்ணிக்கையை விட குறைவானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் டொரன்டோ பெரும்பாக பகுதியில் 2526 புதிய வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 32 வீத அதிகரிப்பாகும் எனினும் கடந்த 10 ஆண்டு சராசரி தொகையுடன் ஒப்பீடு செய்யும் போது 30 வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வட்டி வீத அதிகரிப்பு காரணமாக இவ்வாறு புது வீடு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவிவரும் பண வீக்க நிலையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றது.

இதனால் வீடு விற்பனை பின்னடைவை சந்தித்துள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டிட கைத்தொழில் மற்றும் காணி அபிவிருத்தி நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.