றொரன்டோவில் டாக்ஸியொன்றில் குழந்தை பிறந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பிரசவ வலியில் துடித்த பெண் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேகமாக செல்ல நேரிட்டதாக டாக்ஸி சாரதியான வெர்மன் வோர்னர் தெரிவிக்கின்றார்.
தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் சென்ற போது தூரத்தில் தாயும் மகளும் விமான நிலையத்திற்கு செல்ல ஆயத்தமான நிலையில் இருப்பதாகவே தாம் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் அருகாமையில் சென்று பார்த்த போது பிரவசத்திற்காக வைத்தியசாலை செல்லும் பெண்ணும் அவரது மகளும் அங்கிருந்தனர் என சாரதி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார்.
பிரசவ வலி அதிகரிக்க வேறு வழியின்றி காரின் பின் இருக்கையில் குறித்த பெண் குழந்தை பிரசவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து அவசரமாக வெளியேறி அருகாமையில் இருக்கும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு தாம் முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரசவ வலியில் துடித்த பெண் வாகனத்தின் பின் இருக்கையிலேயே வைத்தியசாலை செல்லும வழியில் குழந்தையை பிரசவித்துள்ளார்.
தாயும் சேயும் நலமாக இருக்கின்றார்கள் என டாக்ஸி சாரதி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.