Reading Time: < 1 minute

றொரன்டோவில் ஓடும் பஸ்ஸில் பயணித்த 12 வயது சிறுமியொருவரை தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

32 வயதான நபர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். இன வெறுப்பு சொற்களை பயன்படுத்தி கடுமையாக திட்டியதுடன் குறித்த நபர் சிறுமியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கிழக்கு றொரன்டோவின் டான்போர்த் மற்றும் பிரதான வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த நபர் சிறுமியையும் ஏனைய பயணிகளையும் அச்சுறுத்தியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரையும் முன்னதாகவே சந்தேக நபர் பஸ்ஸை விட்டு இறங்கி தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் 32 வயதான கோர்டன் பிறவுண் என்ற நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அண்மைய நாட்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது.