Reading Time: < 1 minute

கனடாவில் ஒரே நாளில் 600 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கனடாவின் றொரன்டோவில் இவ்வாறு பாரியளவில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாரினால் மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 58 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

520 கிலோ கிராம் எடையுடைய கிறிஸ்டல் மெதபெட்டமைன் மற்றும் 150 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் ஆகிய போதைப் பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் இவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர் விசாரணைகளின் பின்னர் போதைப் பொருள் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.